நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளரும், சிவகங்கை லோக்சபா தொகுதி மேலிட பொறுப்பாளருமான அர்ஜூன மூர்த்தி அழைப்பிதழை வழங்கினார்.
இதனையடுத்து, ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரருடன் 21ம் தேதி அயோத்தி செல்ல உள்ளார். 22ம் தேதி அயோத்தியில் தங்கி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 23ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.