பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா | பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா |
நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயராமின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் நானியின் ‛ஹாய் நானா' தெலுங்கு படத்தில் கூட ஜெயராம் நடித்திருந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாளத்தில் ‛ஆப்ரஹாம் ஒஸ்லர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயராம்.
இந்த படத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடிக்கிறார். இதுதவிர இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜன.,11ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை நடிகர் மகேஷ்பாபு வரும் ஜனவரி 3ம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு வெளியிட இருக்கிறார். தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் குண்டூர் காரம் படத்தில் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் மகேஷ்பாபு ஜெயராம் படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.