ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் வெற்றி பெற்றவர்களைக்கேட்டால், ஓரிருவர்தான் தங்கள் திறமையை முன்வைத்து ஜெயித்ததாக சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள், தாங்கள் வணங்கும் கடவுளால்தான் இந்த நிலைக்கு வந்ததாக சொல்லி அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வார்கள். ஆனால் நடிகை தமன்னாவோ, என் திறமையினாலோ, நேரத்தினாலோ நான் வெற்றி பெறவில்லை. என் பெயரில் எச் என்ற எழுத்தை சேர்த்த பிறகுதான் எனக்கு பெரிய அளவில் முன்னேற்றம் கிடைத்தது என்கிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், எனது சொந்த ஊர் மும்பைதான். அதனால் ஆரம்பத்தில் இந்திப்படங்களில் நடிக்கத்தான் அதிகமாக போராடி வந்தேன். ஆனால், படவாய்ப்புகள் கிடைப்பதே அரிதாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் அந்த படங்கள் வெளிவராது. இப்படி கடுமையாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம்தான், ஒருவர் தமன்னா என்ற எனது பெயரில் எச் என்ற எழுத்தை சேர்த்தால் பெரிய எதிர்காலம் உள்ளது என்று சொன்னார். அதன்படியே நான் செய்தபோதுதான் நானே எதிர்பார்க்காத வகையில் தெலுங்கு சினிமாவில் படங்கள் கிடைத்தது. குறுகிய காலத்தில் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டேன்.
அதையடுத்து தமிழிலும் முன்னணி நடிகையானேன். இப்போது இந்தியிலும் படம் கிடைத்து நடித்துள்ளேன். ஆக, பெயரில் செய்த சிறிய திருத்தம்தான் என்வாழ்வில் இவ்வளவு மாற்றங்களை செய்து தந்திருக்கிறது என்று சொல்லும் தமன்னா, மீண்டும் தனது மார்க்கெட்டில் ஏதாவது சரிவு ஏற்பட்டால், அதே எண்கணித ஜோதிடரை வைத்து வேறு ஏதேனும் திருத்தம் செய்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்வாராம்.