ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடைபெற இருக்கும் 96வது ஆஸ்கர் விருது போட்டிகளில் கலந்துகொள்ள இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற '2018' என்கிற படம் அதிகாரப்பூர்வமாக நாமினேட் செய்யப்பட்டிருந்தது. இந்த படம் நிச்சயம் ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப்பட்டியலில் இருந்து வெளியேறி ஆஸ்கர் விருது பெரும் வாய்ப்பை இழந்துள்ளது. இது மலையாள ரசிகர்களுக்கு மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் அமைந்துள்ளது.
2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும் அதில் நடைபெற்ற மீட்பு பணிகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.. டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், நரேன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் வெறும் கலைப்படமாக மட்டுமல்லாமல் கமர்சியல் படமாகவும் அமைந்து கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. மலையாளத் திரையில் இருந்து ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள தேர்வான நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.