பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இவர் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படம் தான் அவரை முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்த்தி உள்ளது.
நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியதால் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை கவனித்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் இதே போன்று பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிஜ சம்பவம் ஒன்றை மையப்படுத்தி கதையை உருவாக்கி வருகிறாராம்.
கடந்த 1979ல் கேரள கப்பல் கழகத்திற்கு சொந்தமான எம்வி கைரளி என்கிற கப்பல் 20000 டன் எடை கொண்ட இரும்பை ஏற்றிக்கொண்டு 49 பணியாளர்களுடன் ஜெர்மனியை நோக்கி பயணித்தபோது எதிர்பாராத விதமாக கடலில் ஏற்பட்ட மோசமான சூழலால் திடீரென மாயமானது. இதை மையப்படுத்தி இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை தனது பாணியில் திரைக்கதையாக மாற்றி எழுத்தாளர் ஜோஷி ஜோசப் என்பவருடன் இணைந்து உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 படம் போல இந்த படமும் ரசிகர்களை உறைய வைக்கும் என உறுதியாக நம்பலாம்.