'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி | பெண் வேடத்தில் அசார் |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. தற்போது காக்க காக்க, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜீவன், ரஜினி 171- வது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக இன்னொரு செய்தியும் வைரலாகி வருகிறது. இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது போகப்போகத்தான் தெரியும்.