சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் | தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | அம்மா, தங்கச்சி வேடங்களில் சுவாசிகா | ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் | மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு |
மலையாளத்தில் வளர்ந்து வந்த குணசித்ர நடிகர் வினோத் தாமஸ். தேசிய விருது பெற்ற 'ஐய்யப்பனும் கோஷியும்' படத்தின் மூலம் பிரபலமானார். ஜூன், ஹேப்பி வெட்டிங் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
45 வயதான வினோத் தாமஸை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அவரது உறவினர்கள் பல்வேறு இடத்தில் தேடி வந்தனர். இந்த நிலையில் கோட்டயம் அருகே பம்படி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கார் நின்று கொண்டிருந்த நிலத்தின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் சொன்னதையடுதுது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வினோத் தாமஸ் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா?, மது அருந்தும் பழக்கம் உள்ள அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்தாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.