2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
சமீபத்திய படங்களில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. அப்படி சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான பேபி என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதுபோன்ற காட்சிகள் இளைஞர் சமுதாயத்தை தவறாக வழி நடத்தும் என்று கூறியுள்ள ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அசோக், தற்போது பேபி படக்குழுவினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும் ஆந்திராவில் போதை பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் பெங்களூரில் இருந்து தான் புழக்கத்தில் விடப்படுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் போதைப் பொருட்கள் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற போதைப்பொருள் காட்சிகளை எடுக்கும் படங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.