Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு அரசியல் அட்வைஸ் பண்ண மாட்டேன்: மோகன்பாபு

20 மார், 2013 - 12:39 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு ஆக்ஷன் சூப்பர் ஸ்டாரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பருமான மோகன்பாவுக்கு நேற்று (மார்ச் 19) பிறந்த நாள். வழக்கமாக தன் பிறந்த நாளை இளைஞர்களைப்போல பார்ட்டி வைத்து கொண்டாடும் மோகன்பாபு இந்த முறை தன் பிறந்த நாளை அறவே தவிர்த்து விட்டார். காரணம் சமீபத்தில் அவர் தந்தை மறைந்து விட்டதால். தன் மகள் லட்சுமி பிரசன்னா தயாரித்து நடித்திருக்கும் "மறந்தேன் மன்னித்தேன்" படம் வருகிற 22ந் தேதி தமிழ் நாட்டில் ரிலீசாகிறது. இதற்காக சென்னை வந்திருந்த மோகன்பாபு அளித்த சிறப்பு பேட்டி:

* அப்பாவின் மரணம்...?

முழுமையான வாழ்க்கை வாழ்ந்துட்டுதான் மறைந்தார். என்றாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியில்லை. வீட்டில் அவர் இடம் காலியாகிவிட்டதே... அதனை யாரால் நிரப்ப முடியும். இன்னும் அந்த சோகத்திலிருந்து வெளியில் வரவில்லை.

* தமிழ்நாட்டை ரொம்ப நேசிக்கிறீங்க போல...?

சென்னையில பேட்டி கொடுக்கிறதால சொல்லவில்லை. நிஜம்மாவே எனக்கு தாய்நாடு தமிழ் நாடுதான். ஒரு மஞ்சள் பையில் இரண்டு செட் டிரஸ்ஸோட திருப்பதியிலேருந்து திருட்டு ரெயிலேறி சென்னைக்கு வந்தவன் நான். பிளாட்பாரத்துல படுத்து, கார்பரேஷன் குழாய் தண்ணி குடிச்சு. வடபழனி முருகன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு வளர்ந்தவன். சிவாஜிதான் என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தினார். இன்னிக்கு கார், பங்களா, பல கோடிக்கு சொந்தக்காரன். மூணு குழந்தைக்கு அப்பன் இது அத்தனையும் கொடுத்தது தமிழ்நாடுதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சொல்லுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. ஏர்போட்டுல சென்னை மண்ணுல கால் வைக்கும்போது அம்மா மடியில படுக்குற மாதிரி உணர்வேன். இது மிகையாக சொல்லலீங்க உண்மை.

* தயாரிப்பு, இயக்கம்னு உங்க மகள் லட்சுமி பரபரன்னு இருக்காங்களே?

சின்ன வயசுலேருந்தே அவளை சுதந்திரமா வளர்த்திருக்கேன். ஆண்பிள்ளை மாதிரி வளர்த்திருக்கேன். அவ விருப்பப்பட்ட எதையும் செய்யாம விடமாட்டா... என்னை மாதிரி. என் பிள்ளையாச்சே... தெலுங்குல "கொண்டலோ கோதாவரி"ன்னு தயாரிச்ச பெரிய பட்ஜெட்டா இருக்கே தேவையான்னு கேட்டேன். நீங்க சும்மா இருங்கப்பா நான் ஜெயிச்சு காட்டுறேன்னு சொன்னா. இன்னிக்கு தெலுங்குல பெரிய ஹிட். அவார்டெல்லாம் வாங்கியிருக்கா. என் பொண்ணு என்னை விட நல்லாவே நடிச்சிருக்கா. நானும் 500 படம் வரைக்கும் நடிச்சிருக்கேன். ஒரு அவார்ட்கூட வாங்கினதில்ல.

* திடீர்னு அரசியலுக்கு போனீங்க. போன வேகத்துல திரும்பி வந்துட்டீங்களே?

அரசியல் ஒரு சாக்கடை, நாத்தம் புடிச்சதுன்னு அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது. அதை தாங்க முடியாம திரும்பிட்டேன். அரசியல்ல 90 சதவிகிதம் நல்லவங்க கிடையாது. நிஜமாகவே மக்களுக்கு சேவை செய்யணும்னா அரசியல்ல இருக்க கூடாது. அரசியல் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துறையா மாறிடுச்சு.

* இப்படி சொல்லித்தான் உங்க நண்பர் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்திட்டீங்களா?


இது என்னோட கருத்து. இதுவே பொதுவான கருத்தா எடுத்துக்க கூடாது. ரஜினி என் நண்பன்தான். குடும்பம், சினிமா பற்றி நிறைய பேசுவவோம். அரசியல் பற்றி அவன் எங்கிட்ட எதுவும் கேட்க  மாட்டான். நானும் எந்த அட்வைசும் கொடுத்ததில்லை.

* "கொண்டலோ கோதாவரி" படத்திற்கு ஒரு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவிச்சாங்களே?


சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது இப்போ பேஷனாப் போச்சு. ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைக்குதே. சினிமால இப்பா யாரும்  ஜாதிய சொல்றதில்ல. அரசியல்தான் ஜாதி இருக்கு. சினிமால ரெண்டே ஜாதிதான். ஒண்ணு ஆர்ட்டிஸ் இன்னொன்னு டெக்னீஷியன்.

* நிறைய கல்வி நிறுவனங்கள் நடத்துறீங்களே பணம் சம்பாதிக்கத்தானே?

யார் சொன்னா...? ஆந்திரா பக்கம் வந்து கேட்டுப்பாருங்க. என்னோட காலேஜ் அத்தனையும் மெரிட் அடிப்படையிலதான் நடக்குது. யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாது. காலேஜ் தொடங்கச் சொல்லி ஐடியா கொடுத்ததே சிவாஜி சார்தான். அவரும், கமலா அம்மாவும்தான் வந்து முதல் பள்ளியை திறந்து வைச்சாங்க. என்னோட கல்வி நிறுவனங்களின் அப்ளிகேஷன் பார்முல ஜாதிங்ற காலமே இருக்காது. நிறைய ஏழை மாணவர்களுக்கு ஃப்ரீ எஜுக்கேஷன் கொடுக்குறேன். இப்படி நிறைய பண்ணிக்கிட்டிருக்கேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
21 மார், 2013 - 13:19 Report Abuse
Aravindh Raman யாரு ஒருத்தர் நீல நிறத்தில மினுக்கல் ஷர்ட் போட்டு கிட்டு குமரிமுத்து பார்வையள இருக்கிறாரு
Rate this:
Kaan - Fahaaheel city,குவைத்
20 மார், 2013 - 23:37 Report Abuse
Kaan ஆமாயா நீ அவருக்கு அட்வைஸ் பண்ணி விட்டாலும் ஒடனே அவரு அரசியலில் குதிச்சு கும்மி அடிச்சு குட்டய குழப்பி மீன் புடிச்சு விட்டுருவாரு, உங்களுக்கு இதே வேலையா போச்சு...
Rate this:
Kaan - Fahaaheel city,குவைத்
20 மார், 2013 - 23:31 Report Abuse
Kaan தம்பி மோகன் கண்ணா அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் அவை அடக்கத்துடன் கூறினால் அதற்க்கு தக்க பதில் உண்டு. நீ ஒரு மண்டு...
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
20 மார், 2013 - 19:34 Report Abuse
Sivakumar Manikandan இலங்கை தமிழர் விவகாரம் கொதித்து கொண்டு இருக்கிறது .........இங்கே நண்பருக்கு பிறந்த நாள் பார்ட்டி ..........
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
20 மார், 2013 - 15:40 Report Abuse
itashokkumar அதெல்லாம் வேண்டாம் அவரை படங்களில் நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் அது போதும்.
Rate this:
joshua williams - mumbai,இந்தியா
29 மார், 2013 - 14:47Report Abuse
joshua williamsமோகன் பாபு அண்ட் ரஜினி காந்த இரண்டு பேருமே தமிழகர்கள் கிடையாது / நம் தமிழர்களை முட்டாள்கள் என்று சொல்லவேண்டும்,...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in