சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தில் கவின் | அஜித்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா? | இப்படி ஒரு வேடத்தில் நடிக்கவில்லை என்றால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை : வாணி போஜன் | நிவேதா பெத்துராஜின் போலீஸ் சோதனை வீடியோ, உண்மை என்ன? - சஸ்பென்ஸ் உடைந்தது | வணங்கான் படத்தின் ரிலீசை அறிவித்த தயாரிப்பாளர் | குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபலங்கள் | 'பி.டி. சார்' படம் வெற்றி : தயாரிப்பாளர் அறிவிப்பு | ஒரே பாடலை 6 மொழிகளில் பாடிய ஸ்ரேயா கோஷல் | ஹன்சிகாவின் காந்தாரி தோற்றம் வெளியீடு | செருப்பு அணிவதை கைவிட்ட விஜய் ஆண்டனி |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ராணுவ பின்னணியில் கதைக்களம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததாக அருண் மாதேஸ்வரன் போட்டோ உடன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பின் தனுஷின் 50வது படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார் சந்தீப் கிஷன்.