Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலத்தை வென்ற காவியக் கவிஞன் கவியரசர் கண்ணதாசன்.

24 ஜூன், 2023 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-Legendary-lyricist-kannadasan

“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று ஆரூடம் பாடிச் சென்ற அபூர்வ கவிஞன், கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 96வது பிறந்த தினம் இன்று…

இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, வெற்றி, தோல்வி என வாழ்வின் அத்தனை உணர்வுகளுக்குமான பாடல்களை பாடிச் சென்ற பைந்தமிழ் பாவலன் கவியரசர் கண்ணதாசன், சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரில், சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் 1927, ஜூன் 24ல் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தையா.

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், பின்னர் எட்டாம் வகுப்பு வரை அமராவதி புதூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.

சிறு வயதிலிருந்து எழுத்தின் மீது தீரா காதலும், ஆர்வமும் கொண்டிருந்த கவியரசர், பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்ற கனவும் கொண்டிருந்ததோடு, சினிமாவில் நடிக்கும் ஆர்வமும் சேர, சென்னை வந்து சேர்ந்தார்.

பல இன்னல்களுக்குப் பின் சென்னையில் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைக்கப் பெற்று, பணிபுரிந்து கொண்டே கதைகளையும் எழுதத் தொடங்கினார்.

இவரது “நிலவொளியிலே” என்ற முதல் கதை “கிரகலட்சுமி” என்ற பத்திரிகையில் வெளிவந்ததைக் கண்டவுடன், உற்சாகமும், உத்வேகமும் கொண்டு தனது எழுத்துப் பணியை இன்னும் தீவிரமாக்கத் தொடங்கினார் கவியரசர்.

புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த “திருமகள்” என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த போது தான் தனது இயற்பெயரான முத்தையாவை கண்ணதாசனாக்கினார்.

தொடர்ந்து “திரை ஒளி” பத்திரிகையின் ஆசிரியராகவும், அதன்பின் மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்தி வந்த “சண்டமாருதம்” பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வந்து போது, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகவிலும் கண்ணதாசன் இடம் பெற்றார்.

முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத கவியரசர் முயற்சித்த போது, ஜுபிடர் நிறுவன தயாரிப்பில், இயக்குநர் கே ராமநாத் இயக்கத்தில் வெளிவந்த “கன்னியின் காதலி” என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார். கண்ணதாசன். “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற இந்தப் பாடல்தான் கவியரசர் எழுதிய முதல் திரைப்படப் பாடல்.

“பாகப்பிரிவினை”, “பாவமன்னிப்பு”, “பாலும் பழமும்”, “பாசமலர்”, “பார்த்தால் பசி தீரும்”, “படித்தால் மட்டும் போதுமா” என தொடர்ந்து எண்ணற்ற படங்களில் கவியரசரின் பாடல்கள் மிகப் பிரபலமாயின. தொடர்ந்து 30 ஆண்டுகள் ஈடு இணையற்ற கவிஞராய் கோலோச்சியிருந்தார் கவியரசர் கண்ணதாசன்.

ஒரு பாடலாசிரியராக மட்டுமின்றி, கதை, வசனம், தயாரிப்பு என வெள்ளித்திரையின் அனைத்து துறைகளிலும் தடம் பதித்த ஒரு தனிப் பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர்தான் கண்ணதாசன்.

“மாலையிட்ட மங்கை”, “சிவகங்கைச் சீமை”, “கவலையில்லாத மனிதன்”, “வானம்பாடி” போன்ற சில படங்கள் கவியரசர் கண்ணதாசனை ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் திரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டின.

“பராசக்தி”, “இரத்தத் திலகம்”, “கருப்பு பணம்”, “சூரியகாந்தி”, “அபூர்வ ராகங்கள்” போன்ற திரைப்படங்கள் கவியரசரை ஒரு நடிகராக அடையாளப்படுத்தின.

கவியரசரை பொருத்தவரை தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யங்களைக் கூட படத்தின் சூழலுக்கேற்றவாறு சூசகமாக எடுத்துரைத்து பாடல்கள் புனைவதில் அசகாயசூரர்.

கம்பரிடமும், பாரதியிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கவியரசர். மகாகவி பாரதியாரை தனது மானசீக குருவாக கொண்டிருந்தார். காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன் என ஏனைய புனைப் பெயர்களிலும் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தார் கண்ணதாசன்.

கதை, கவிதை, நாவல்கள், சிறுகதை தொகுப்பு, கட்டுரைகள், வனவாசம் உள்ளிட்ட சுயசரிதைகள், 10 பாகங்களாக வெளிவந்த அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம், பாண்டிமாதேவி, அம்பிகை அழகு தரிசனம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் போன்ற ஏராளமான தனது அற்புத படைப்புகளால் இலக்கிய உலகின் உச்சம் தொட்டார்.

தனது சேரமான் காதலி என்ற நாவலுக்காக “சாகித்ய அகாடமி விருது”ம், சிறந்த பாடலாசிரியருக்கான “தேசிய விருது” “குழந்தைக்காக” திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.

திரைப்படப் பாடல்கள், கவிதைகள், புதினங்கள், நாவல்கள் என தனது ஏனைய இலக்கிய படைப்புகளால் தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி காணச் செய்த கவியரசர் கண்ணதாசன் ஒரு நடமாடும் நூலகம் என்றால் அது மிகையல்ல.

“உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே” என்று இறுதியாக பாடிச் சென்ற கவியரசர், தனது ஆகச் சிறந்த படைப்புகளால் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என கூறி, அவரது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சில நினைவுகளை பகிர்ந்தமைக்கு பெருமை கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஆரம்ப நிலையில் தான் உள்ளார் - உதயநிதி பேட்டிவிஜய் ஆரம்ப நிலையில் தான் உள்ளார் - ... பண்ணிசையை இன்னிசையாய் தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பண்ணிசையை இன்னிசையாய் தந்த மெல்லிசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in