கமல் பட வாய்ப்பை மறுத்தாரா பிரேமலு பட இயக்குனர்? | இன்ஸ்பெக்டர் ரிஷியை பாராட்டிய ரஜினி : ஜே.எஸ் நந்தினி நெகிழ்ச்சி | விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' |
நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, ‛அனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சிரஞ்சீவியின் ‛காட் பாதர்'. விரைவில் இவர் நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை இயக்கவுள்ளார் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது மகன் பிரணவ் மோகன் இப்போது குழந்தை நட்சத்திரமாக சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த தமிழரசன் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபாகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையே இவரின் கதாபாத்திரத்தின் மூலம் தான் நகரும். அந்த அளவிற்கு கனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி, ‛டிக் டிக் டிக்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது போன்று இப்போது மோகன் ராஜா மகனும் இந்த படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.