நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை மட்டுமே அதிக அளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. எப்போதும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது படங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதையும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று அவரது மக்கள் செய்தி தொடர்பாளர் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு மீண்டும் விரைவில் திரும்ப பெறப்படும் என்றும் அதுவரை அதில் வெளியாகும் பதிவுகளுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது குறித்து டுவிட்டர் உரிமையாளரான எலன் மாஸ்க்கிற்கும் புகார் ஒன்றை அனுப்பி, ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கை விரைவில் மீட்டு தந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோளும் வைத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த நாளே ஹேக் செய்யப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு தன்வசம் வந்து விட்டதாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.