நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த சில மாதங்களில் மம்முட்டி நடித்த ஆக்சன் படமான ‛கிறிஸ்டோபர்' மற்றும் ஆர்ட் படமான ‛நண்பகல் நேரத்து மயக்கம்' ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு புனே மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்றது. தற்போது மீண்டும் கேரளாவுக்கு திரும்பிய படக்குழுவினர் வயநாடு பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்காகவும் மம்முட்டியிடம் உதவி கேட்பதற்காகவும் கேரளாவில் உள்ள வேட்டத்தூர் பகுதியைச் சேர்ந்த கோத்ரா சமூகத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த சிலர் கண்ணூர் ஸ்குவாட் படப்பிடிப்பிற்கு நேரில் வந்தனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற மம்முட்டி அவர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் அவர்களது குழந்தைகளுக்கான கல்வி உதவிகளை தன்னுடைய அறக்கட்டளை மூலமாக செய்வதாக உறுதி அளித்தார். அதுமட்டுமல்ல அங்கே வந்தவர்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து உதவியும் செய்து அவர்களை மகிழ்ச்சியுடன் வெளியே அனுப்பி வைத்துள்ளார் மம்முட்டி.