நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் டொவினோ தாமஸ். கடந்த இரண்டு வருடங்களில் வெளியான அவரது படங்கள் தொடர்ந்து டீசன்டான வெற்றியை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவர் நடித்த தள்ளுமால என்கிற திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு குறையாமல் தற்போது நடித்து வருகிறார்.
இதில் இயக்குனர் ஆசிக் அபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள நீல வெளிச்சம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் சித்திரை விஷு (ஏப்-14) பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் நஸ்ரியா நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓசானா படத்தை இயக்கிய ஜூடு ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 2018 என்கிற திரைப்படம் அதற்கு அடுத்த வாரம் ரம்ஜான் பண்டிகையின் போது (ஏப்-21) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இந்தப்படம் 2018ல் கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது.