நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தயாரிப்பாளர் வி. ஏ. துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். என்னம்மா கண்ணு, பிதாமகன், லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் பாபா படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். ஆனால் தற்போது அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு நடிகர் சூர்யா ரூ 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக தகவல் வெளியானது. அதேபோல நடிகர் கருணாஸ் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு "நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதிருங்கள். மொத்த செலவையும் நான் பார்த்து கொள்கிறேன். ஜெயிலர் படத்தை முடித்ததும் நேரில் வந்து பார்க்கிறேன்'' என உறுதி அளித்துள்ளாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.