நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான ‛கணம்' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004ல் தெலுங்கில் ‛கவுரி' என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார் ஷர்வானந்த். அதைத் தொடர்ந்து சங்கர் தாதா எம்பிபிஎஸ், வெண்ணிலா என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும், இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் மாறிமாறி தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனது திரையுலக பயணத்தில் 20 வருடங்களை வெற்றிகரமாக கடந்து விட்டதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஷர்வானந்த். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த திரையுலக பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல நட்பு, கடுமையான சவால்கள், ஏற்ற இறக்கங்கள்,புன்னகை, போராட்டங்கள் என அனைத்தும் கலந்ததாக இருந்தது” என்று கூறியுள்ளார் ஷர்வானந்த்.
இந்த 20 வருட பயணத்தில் தனக்கு துணையாக நின்ற ரசிகர்கள் சுக துக்கங்களில் எப்போதும் தன்னுடன் துணை நின்ற நலம் விரும்பிகள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஷர்வானந்த் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக ரன் ராஜா ரன் என்பது போல தான் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
தனது 20 வருட திரை உலக பயணத்தில் இதுவரை 34 படங்களில் ஷர்வானந்த் நடித்துள்ளார் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது 35 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்ரீராம் ஆத்ரேயா என்பவர் இயக்குகிறார்.
நீண்ட நாட்களாகவே இவரது திருமணம் எப்போது என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தான், மறைந்த ஆந்திர எம்எல்ஏ கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தியான ரக்சிதா என்பவருடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.