ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்கள் பற்றாக்குறை அதிகமாகவே காணப்படுகிறது. சந்தானம், சூரி ஆகியோர் கதாநாயகனாக நடிப்பதில் தீவிரமாகி விட்டனர். நடிகர் யோகிபாபுவோ பல படங்களில் காமெடி நடிகராகவும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார். இந்த இடைவெளியில் கடந்த இரண்டு வருடங்களில் சற்றே நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக வளர்ந்து விட்டார் ரெடின் கிங்ஸ்லி.
குறிப்பாக டாக்டர், அண்ணாத்த, கட்டா குஸ்தி என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக முக்கிய இடம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி, தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஈரம் படத்தை தொடர்ந்து ஆதி மீண்டும் கதாநாயகனாக நடித்து வரும் சப்தம் என்கிற படத்திலும் தற்போது இணைந்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி. சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லியும் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.