நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த வருடம் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் அலை இப்போது வரை நீங்காமல் ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ளது. கோல்டன் குளோப் விருது, ஆஸ்கார் விருது ரேஸ், சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக் விருது வழங்கும் விழா என தொடர்ந்து விருதுக்கான போட்டிகளிலும் பங்கேற்று வருகிறது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக் விருதுகள் விழாவில் இந்த படத்திற்கு பல பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டாலும் படத்தின் இன்னொரு நாயகனான ஜூனியர் என்டிஆர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்தப்படத்தின் வெற்றியில் ஜூனியர் என்டிஆர் புறக்கணிக்கப்பட்டு ராம்சரண் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார் என்பது போன்று ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட விருது வழங்கும் அமைப்பு, ஜூனியர் என்டிஆர் தன்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு மற்றும் தனது சகோதரர் மரணம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கான விருதை உரிய நேரத்தில் அவர் பெற்றுக்கொள்வார் என்றும் விளக்கம் அளித்து ரசிகர்களை சமாதானப்படுத்தியது.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆருக்கும் படத்தின் கதாநாயகியாக நடித்த ஆலியா பட்டுக்கும் இந்த ஹாலிவுட் கிரிடிக் விருதுகள் வரும் வாரத்தில் அனுப்பப்பட இருக்கின்றன என்கிற தகவலை இந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளதுடன் அவர்கள் இருவருக்கான விருது டிராபிகளையும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.