500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
டுவைன் ஜான்சன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த 'பிளாக் ஆடம்' படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தை ஜொமே கொலெட் செர்ரா இயக்கி இருந்தார். ஆல்டிஸ் ஹாட்ஜ் , நோவா சென்டினோ, சாரா ஷாஹி, மார்வான் கென்சாரி, க்வின்டெஸ்ஸா ஸ்வின்டெல் மற்றும் பியர்ஸ் ப்ரோஸ்னான் நடித்திருந்தார்கள். ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியோர் பேர்சன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இது நெகட்டிவ் சூப்பர் ஹீரோ படம். டுவைன் ஜான்சன் டெத் ஆடம் ரோலில் நடித்திருந்தார்., இவருக்கு எல்லா கடவுள்களின் சக்திகள் வழங்கப்படுகிறது. பழங்கால கான்டாக்கில் (கற்பனையான ஒரு மத்திய கிழக்கு நாடு), அவருடைய சக்திகளைக் தவறாக பயன்படுத்தியதற்காக ஏறக்குறைய 5,000 வருடங்கள் சிறை வைக்கப்படுகிறார். அவர் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வருகிற 15ம் தேதி வெளியாகிறது. தியேட்டரில் பார்க்க தவறியவருக்கு மற்றுமொரு வாய்ப்பு.