மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஷாலு சவுதாசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபத்தில் உள்ள கே.பி.ஆர் பூங்காவில் ஷாலு நடை பயிற்சி சென்றபோது சில மர்மநபர்கள் அவரை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இதில் ஷாலு கூச்சலிட்டதால் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இந்த சம்பத்திற்கு பிறகு ஷாலு அந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யவில்லை.
கடந்த சில வாரங்களாக அவர் மீண்டும் நடைபயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்னாலேயே வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகார் செய்தார். ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஷாலு சவுராசியாவும் போலீசில் புகார் அளித்தார். வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் நடிகையை பின் தொடரவில்லை என்றும், தானும் நடைபயிற்சி செய்ததாக தெரிவித்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அந்த வாலிபர் சொல்வது உண்மை என்று உறுதிப்படுத்தினர். “2021ம் ஆண்டு நடந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து ஷாலு இன்னும் வெளிவரவில்லை. யாரோ தன்னை பின்தொடர்வதாக அவர் உணர்கிறார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.