நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் சமீப நாட்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 50 முதல் 100 கோடிகளை அசால்ட்டாக அள்ளி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த படத்தின் இயக்குனர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் தானாக தேடி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ரோமாஞ்சம் என்கிற திரைப்படம் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாகி இப்போது வரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ளார். பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து ஹாரர் கலந்த காமெடி படமாக இந்த படத்தை உருவாக்கி ஹிட் ஆக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக நடிகர் பஹத் பாஸில் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் மார்ச் மாதமே துவங்கப்பட்டு வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதே போல கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படமும் இதே பாணியில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அந்த படத்தின் இயக்குனர் விபின் தாஸ் மீண்டும் அதே ஹீரோவை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரித்விராஜ் தானே முன்வந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.