'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா | நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் |
காமெடி, ஹீரோ, குணச்சித்ரம் என பயணித்து வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தாலும் இடையே நாயகனாகவும் நடிக்கிறார். அந்தவகையில் தற்போது "ஐகோர்ட் மகாராஜா" என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார். பிரிடா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சாண்டி இசையமைக்கிறார். மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர். காமெடி கலந்த படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வையை வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.