நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் நடிக்கப் போகும் நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பணியில் உள்ள ராஜமவுலி அது முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தபடத்திற்கு முன்பாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ்பாபு. ஏற்கனவே ஒருக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் மகேஷ் பாபு, தற்போது தனது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறிக் கொண்டிருக்கிறார் . அதற்காக அவர் ஜிம்மில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மகேஷ் பாபு.