நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அரசு முறை பயணமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி, எதிர்காலம் குறித்தும், தெலுங்கு சினிமாவின் அசுர வளர்ச்சி குறித்தும் பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது. இந்த சந்திப்பின்போது மற்றொரு தெலுங்கு முன்னணி ஹீரோவானா நாகார்ஜுனா, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் உடன் இருந்தனர். அமைச்சருக்கு சிரஞ்சீவி, விநாயகர் சிலையை பரிசளித்தார். மத்திய அமைச்சர், சிரஞ்சீவியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்து சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் “ஐதராபாத் வருகையின் போது எனது வீட்டிற்கு வர நேரம் ஒதுக்கிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றிகள். இந்தியத் திரைப்படத் துறை மற்றும் அதன் வேகமான முன்னேற்றம் குறித்து எனது சகோதரர் நாகார்ஜூனாவுடன் சேர்ந்து நடத்திய மகிழ்ச்சிகரமான விவாதம் மிகவும் பிடித்திருந்தது” என பதிவிட்டுள்ளார்.