நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டில் வெளியான 'கல்லி பாய்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மல்லிகா சிங். ஜான்பாஸ் சிந்துபாத், ராதாகிருஷ், ஜெய் கன்கய்யா லால் கி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எஸ்கேப் லைவ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சுனி இயக்கத்தில் வினய் ராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். மல்லிகா சிங் நடித்த இந்தி வெப் சீரீசான 'ராதா கிருஷ்' தொடர் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரபலமானது. இதன் மூலம் அவர் கன்னட மக்களுக்கு அறிமுகமானதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படத்திற்கு வீர் சமத் இசையமைக்கிறார். சபா ஒளிப்பதிவாளர். இது ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி.