ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாள திரை உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த ஆறேழு ஆண்டுகளாக அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்தி வரும் சுரேஷ்கோபி, அது தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று அவர் பேசிய பேச்சு ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதாவது கடவுள் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் அழிவார்கள் என்று அவர் பேசியதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ்கோபி, “நான் அந்த நிகழ்வில் பேசிய முழுமையான பேச்சை வெளியிடாமல், தங்களுக்கு வேண்டியபடி வெட்டியும், ஒட்டியும் எடிட் செய்து என் மீது தவறான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எனது அன்பு எதிரிகள் இந்த வேலையை செய்துள்ளனர். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் குறித்தும் நான் மரியாதையை வைத்திருக்கிறேன். அதனால் ஒருபோதும் நான் அப்படி பேச வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியுள்ளார்.