நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கண்ட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் தற்போது கன்னடம் மட்டுமின்றி தமிழிலும் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் அவரது நடிப்பில் வெளியே உருவான வேதா திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வேதா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ல் சிவராஜ்குமார் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வெளியான முப்டி படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ‛பைரதி ரணகல்' என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. முப்டி படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரையே இந்தப்படத்தின் டைட்டிலாக மாற்றியுள்ளார்கள். முதல் பாகத்திற்கு முன்னதாக சிவராஜ்குமாரின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை சொல்லும் விதமாக ப்ரீக்வல் ஆக இந்த இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நார்தன் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த முப்டி திரைப்படம் தான் தற்போது தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல என்கிற பெயரில் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.