ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நந்தமூரி தாரக ரத்னா, கடந்த ஜனவரி 27ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 39. அவருக்கு அலெக்யா ரெட்டி என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் பேரன்களில் ஒருவரான இவர், நந்தமூரி தாரக் குடும்பத்திலிருந்து தனது சித்தப்பா பாலகிருஷ்ணா, சகோதரர்கள் ஜூனியர் என்டிஆர், கல்யாண்ராம் ஆகியோரை தொடர்ந்து நடிகராக சினிமாவில் நுழைந்தார்.
2002ல் ஒகடோ நம்பர் குர்ரடு என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கூட தொடர்ந்து நடித்து வந்தார். தாத்தாவின் வழியில் எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் ஆசையில் தனது தாத்தா துவங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சிப்பணிகளிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார் நந்தமூரி தாரக ரத்னா.
குறிப்பாக அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஆசையுடன் இவர் களப்பணி ஆற்றி வந்தார். அந்தவகையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் யுவகளம் பாதயாத்திரையில் கலந்து கொண்டபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடனடியாக குப்பம் தொகுதியில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சை அளிப்பதற்காக மறுநாளே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.