மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வினீத் சீனிவாசன் நடிப்பில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் வெளியானது. மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு சில காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இந்த படம் குறித்து ஒரு விழாவில் மலையாள நடிகர் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் நகைச்சுவை நடிகருமான இடவேள பாபு என்பவர் விமர்சித்து பேசியதாக ஒரு பரபரப்பு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இடவேள பாலு வினீத் சீனிவாசன் குறித்தும் அவர் நடித்திருந்த உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ் படம் குறித்தும் நான் தவறாக எதுவும் பேசவில்லை. அந்த படம் மோசமான படம் என்றும் நான் கூறவில்லை. அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. பெரியவர்கள் மட்டுமே அந்த படம் பார்க்கலாம் என்கிற விதமாக அந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் வினீத் சீனிவாசன் நடித்திருந்த படம் என்பதால் எல்லோரும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் தனது மகனையும் அழைத்துக்கொண்டு வந்ததாக ஒரு வங்கி மேலாளர் என்னிடம் கூறினார். சென்சார் இந்த விஷயத்தில் கண்காணிக்க வேண்டும் என்று தான் நான் அந்த மேடையில் பேசினேன். ஆனால் நான் ஏதோ படம் குறித்து தவறாக பேசிவிட்டேன் என்பது போல அந்த செய்தி திரித்து வெளியாகிவிட்டது. ஆனாலும் அதன்பிறகு அந்த படத்திற்கு இன்னும் அதிக பப்ளிசிட்டி கிடைத்தது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.