மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கேஜிஎப் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலிருந்து இன்னும் ஒரு வெற்றிப்படமாக வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என நான்கு மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. ஆனால் படம் வெளியான சில வாரங்களிலேயே இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக்குழுவாக இயங்கி வரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் ஏற்கனவே உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பி என்கிற சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்து காந்தாரா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி மீது வழக்கு தொடர்ந்தது. அதனையடுத்து காந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இரு தரப்பிலும் மாறிமாறி இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிக்குள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை உறுதி செய்த உச்சநீதிமன்றமும் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டதுடன், ஒருவேளை இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்கிற ஒரு சலுகையையும் வழங்கியது.
இந்த நிலையில் கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்தனர். இதுகுறித்து கேரள போலீசார் தரப்பில் கூறும்போது மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்கள் மறுபடியும் ஆஜராக வேண்டும் என்றும் போலீஸாரால் கூறப்பட்டுள்ளது. செக்சன் 63 காப்பிரைட் சட்ட விதியின்படி இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருந்தது. அதேசமயம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இவர்கள் இருவருக்குமே கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.