நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'பாகுபலி'குப் பிறகு பிரபாஸிற்கு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷ்யாம்' படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற்றது.
படப்பிடிப்பு பணிகளில் பரபரப்புடன் ஈடுபட்டிருந்தாலும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொண்ட பிரபாஸ், அன்பு காட்டிய ரசிகர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகர்களின் உற்சாகமான கரவொலிகளுக்கிடையே உரையாடினார். படங்களின் தோல்வி, காதல் வதந்தி இவற்றிலிருந்து ரசிகர்களை திசை திருப்பவே இந்த சந்திப்பு நிகழ்ச்சியை பிரபாஸ் நடத்தியதாக கூறப்படுகிறது.
பிரபாஸ் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்திலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் 'புராஜெக்ட் கே' படத்திலும் நடித்து வருகிறார்.