நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

முன்னணி மலையாள நடிகர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான மாளிகப்புரம் படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இந்த படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியில் இருந்த உன்னிமுகுந்தனுக்கு இப்போது சிக்கல் வந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஒரு இளம் பெண் உன்னிமுகுந்தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார். தன்னை கதை விவாதத்துக்கு வருமாறு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் வழக்கின் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நடந்போது உன்னிமுகுந்தன் வழக்கறிஞர் இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக் கொள்கிறோம் என்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
இந்த நிலையில் உன்னி முகுந்தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த பெண் மீண்டும் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி “தன்னுடன் எந்த சமரச பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எந்த சமரச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. எனவே வழக்கை தொடர்ந்த நடத்த வேண்டும்” என்று புதிய மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு விதித்திருந்த தடையை நீக்கியதோடு, உன்னி முகுந்தனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 17ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.