நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படம் உலக அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது. தற்போது ஆஸ்கார் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது. 90 சதவிகிதம் ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்புடன் உள்ளது.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு இன்னொரு சர்வதேச விருதான கோல்டன் டொமேட்டோ விருது கிடைத்துள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த ரோட்டன் டொமெட்டோஸ் அமைப்பு ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களின் ரேட்டிங் கொடுக்கும். அதுபோல் சிறந்த படங்களுக்கு கோல்டன் டொமேட்டோ விருதையும் அறிவிக்கும்.
இந்த அமைப்பு நடத்திய வாக்கெடுப்பில் ஆர்ஆர்ஆர் படம் முதல் இடத்தை பிடித்தது. 2 வது இடம் டாப் கன் படத்துக்கும், 3-வது இடம் எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்துக்கும், 4-வது இடம் த பேட்மேன் படத்துக்கும், ஐந்தாவது இடம் அவதார் 2 படத்துக்கும் கிடைத்துள்ளன. ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி மற்றுமொரு சர்வதேச விருதை பெற்றுள்ளது ஆர்ஆர்ஆர்.