நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக என்ட்ரி கொடுத்தார் ரேஷ்மா பசுபுலேட்டி. ஒருவழியாக ராதிகா கதாபாத்திரத்தில் செட்டாகி நடித்து வரும் ரேஷ்மாவுக்கு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியல் ஒன்றில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து ரேஷ்மா பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து விலகுவதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்தன.
இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், பாக்கியலெட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ள ரேஷ்மா, 'நட்பு, கதை, படப்பிடிப்பில் நாங்கள் ஒன்றாக செலவழிக்கும் அழகான, கடினமான நாட்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாம் அனைவரும் விழித்தெழுந்து ஒரு நல்ல நாளை பார்க்கவே விரும்புகிறோம். அது உங்களுக்கு பிடித்தவர்களுடன் இருக்கும் போது மறக்க முடியாததாக இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட பேர்வெல் வாழ்த்து சொல்வது போல் வெளியாகியுள்ள இந்த பதிவால் ரேஷ்மா சீரியலை விட்டு விலகுவது உறுதிதான் என பலரும் கூறிவருகின்றனர்.