நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் பஹத் பாசில் கடந்த 2020 இறுதியில் தெலுங்கில் நடித்த புஷ்பா, அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியான விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தையும் தாண்டி தெலுங்கிலும் தமிழிலும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளன. கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகராக மாறிவிட்ட பஹத் பாசில் தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் வில்லனாக புஷ்பா 2 மற்றும் கதாநாயகனாக ஹனுமன் கீர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் தூமம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இந்த படத்தின் மூலம் இவர் கன்னட திரை உலகிலும் அடி எடுத்து வைத்ததாக சொல்லப்பட்டது.
அதேசமயம் இது கன்னட படம் அல்ல என்றும் முழுக்க முழுக்க மலையாளத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மூலம் கன்னட இயக்குனரான பவன்குமார் தான் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகை அபர்ணா பாலமுரளி பஹத் பாசிலுக்கு ஜோடியாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
முதன்முறையாக மலையாளத்தில் படம் இயக்கியது குறித்து இயக்குனர் பவன்குமார் கூறும்போது, “கலைக்கு மொழி ஒரு பிரச்சனை கிடையாது. ஒரு வார்த்தை கூட மலையாள தெரியாமல் தான் இந்தப்படத்தை இயக்க ஆரம்பித்தேன்.. பஹத் பாசில் நடித்த காட்சிகளில் ரீ டேக் எடுக்கலாம் என கூறியபோது, எல்லோரும் எப்படி மலையாள வார்த்தைகளை புரிந்துகொண்டு அதில் தவறு கண்டுபிடித்தீர்கள் என்று ஆச்சர்யமாக கேட்டனர்.. ஆனால் நான் கவனித்தது மொழியை அல்ல, நடிகர்களின் நடிப்பையும், அவர்களது முகபாவத்தையும் வசன உச்சரிப்பையும் மட்டும் தான்.. இந்தப்படத்தில் பஹத் பாசிலும் அபர்ணா பாலமுரளியும் தங்களது முதல் படத்தில் நடிப்பது போன்று மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்” என்று கூறியுள்ளார்.