3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
விஜய்சேதுபதி படிக்கும் முதல் வெப் தொடர் பார்சி. இதனை பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ், டீகே இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராஷி கண்ணா, கேகே மேனன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த தொடரில விஜய்சேதுபதி துணிச்சலும், நேர்மையும் மிக்க உயர்போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் தலைமையிலான கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இதன் கதை. 8 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.
இதுகுறித்து விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாகித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. என்றார்.