'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
பொங்கல் மற்றம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, விஜய் நடித்த வாரசுடு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகி இருக்கிறது.
முதல் இரு நாட்கள் அந்தந்தத நடிகர்களின் ரசிகர் தியேட்டரை நிரப்பினார்கள். ஆனால் அடுத்து நாளில் இருந்து நிமிர்ந்து நிற்பது வீர சிம்ஹா ரெட்டியே. முதல் நாளே 32 கோடி வசூலித்து எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்றேறிக் கொண்டிருக்கிறார் சிம்ஹா ரெட்டி. ஆச்சார்யா, காட்பாதர் படங்களுக்கு பிறகு சீரஞ்சீவிக்கு வால்டர் வீரய்யா படமும் சுமார் ரகம் என்ற அளவிலேயே விமர்சனங்கள் வந்துள்ளன. இருப்பினும் முந்தைய படங்களை விட கலெக்ஷன் ஓரளவுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
விஜய் நடித்த முதல் நேரடி படமான வாரசுடு இன்று தான் அங்கு வெளியாகி உள்ளது. அஜித் படங்கள் தெலுங்கில் எவ்வளவு வரவேற்பை பெறுமோ, அதைவிட அதிகமாக துணிவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில் தெலுங்கு சினிமா பொங்கல் ரேஸில் வீரசிம்ஹா ரெட்டி வசூலில் முன்னணியில் உள்ளாராம்.