ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
2023ம் ஆண்டு பொங்கல் வெளியீடுகள் அமோகமான ஆரோக்கியமான போட்டியில்தான் ஆரம்பமாக உள்ளது. விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளன.
'துணிவு' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி யு டியூபில் 44 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில் 'வாரிசு' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. 'துணிவு' டிரைலர் புதிதாக சாதனைகளைப் படைக்காமல் இருந்தாலும் அஜித் படங்களின் டிரைலர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள டிரைலர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
விஜய்யின் 'வாரிசு' டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் அது பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 'துணிவு' டிரைலர் படைக்காத புதிய சாதனையை 'வாரிசு' டிரைலர் படைக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இரண்டு படங்களின் சில பாடல்கள் இதற்கு முன்பு வெளியாகி இருந்தாலும் டிரைலர் மோதல்தான் பரபரப்பாகப் பேசப்படும்.
'வாரிசு' படம் குடும்பப் பாங்கான படம் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அதற்கேற்றபடி குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்கும் விதத்தில்தான் அந்த டிரைலர் இருக்கும். தமிழ், தெலுங்கில் இன்று மாலை டிரைலர் வெளியாகப் போகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான டிரைலர்களில் விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' டிரைலர்தான் 60 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை சில தினங்களில் 'வாரிசு' டிரைலர் முறியடிக்க வாய்ப்புள்ளது.