நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரையில் நடிகையாக இருந்த தர்ஷா குப்தா சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானதால் இவரை கவர்ச்சி கன்னியாகவே பலரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் அவர் நடித்த 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வின் போது தர்ஷா குப்தாவை சூழ்ந்து கொண்ட சில செய்தியாளர்கள் அவரிடம் 'ஏன் அதிகமாக கிளாமர் காட்டுகிறீர்கள்?' 'கிளாமர் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா?' என்பது போல் கேள்விகளை எழுப்பியிருந்தனர். கிளாமரை மட்டும் நம்பாமல் நடிப்பில் உங்கள் திறமையை காட்டுங்கள் என்று ட்வைஸும் செய்திருந்தனர்.
இதனையடுத்து 'ஓ மை காட்' படத்தின் ஒரு காட்சிக்காக அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய நிலையில் ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள தர்ஷா குப்தா, கேப்ஷனில் கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள் என்று கூறிய அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். மேலும், அந்த காட்சிக்காக மாலை 6 மணி வரை எதுவும் சாப்பிடமால், தண்ணீர் குடிக்காமல் இருந்ததாகவும், கடின உழைப்பில்லாமல் எதுவும் எளிதாக நடந்துவிடாது எனவும் தனது டெடிகேஷனை காண்பித்து பதில் கொடுத்துள்ளார்.