நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

என்னங்க பார்க்க இளமை துள்ளும் அழகியாக இருப்பதால் சும்மா காதல் காட்சிகளில் மட்டுமே நடிப்பேன் என நினைச்சுட்டீங்களா... நமக்கு ஆக் ஷன் நல்லாவே வரும் என நிரூபிக்கும் அளவிற்கு 'ராங்கி' படத்தில் நிருபராக நடித்து சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ள திரிஷா மனம் திறக்கிறார்..
'ராங்கி' படம், வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி
இயக்குனர் முருகதாஸ் கதை எழுத, 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர் சரவணன் இயக்கிய படம் தான் 'ராங்கி'. இதில் நிருபராக நடித்துள்ளேன். ஹீரோயின் படம் என பார்க்காமல் லிபியா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது.
பொன்னியின் செல்வன் 'குந்தவை' டூ ராங்கி
'ராங்கி' படத்தில் குந்தவைக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் தான். நிருபர்கள் எப்பவும் மேக்கபின்றி எளிமையாக இருப்பாங்க. முடிந்த வரை அந்த கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கேன். ஒரு பேஸ்புக் கதையில் துவங்கி ஒரு பொண்ணு பெரிய விஷயத்தில் சிக்கும் கதை. டூப் இல்லாமல் ஆக் ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறேன்.
ஹீரோ பார்க்க புதுமுகமாக இருக்கிறாரே
இயக்குனர் சரவணன் உஸ்பெகிஸ்தானில் ஒரு பையனை தேடி பிடித்து அறிமுகப்படுத்தினார். அவர் பேர் ஆலிவ். அவ்வளவு உணர்ச்சிகளுடன் அந்த பையன் நடிச்சிருக்கான். படம் முழுக்க துறு, துறுன்னு இருப்பார். அனைவருக்கும் அவர் நடிப்பு பிடிக்கும்.
படம் வெளியானதும் உங்கள் மனநிலை
மக்கள் என்ன சொல்லுவாங்க அப்படிங்கிற எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு ஹீரோயின் மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் எது நடந்தாலும் நம்ம தான் பொறுப்பு. ஒவ்வொரு படம் ரிலீஸ் வெளிவரும் போதும் எனக்கு ஒரு பதட்டம் இருக்கும்.
எப்படி எப்பவுமோ சிலிம்மா இருக்கீங்க
இந்த கேள்விக்கு என்கிட்ட சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என சொல்லலாம். வேற என்ன சொல்றது காரணம் தெரியல. எப்போதும் என்னை மகிழ்ச்சியா வச்சிருக்கேன்..
உங்களை இயக்கிய இயக்குனர்கள் குறித்து
தொடர்ந்து என்னை நல்ல கதைகளில், நல்ல கேரக்டர்களில் நடிக்க வைத்த மணிரத்தினம், கவுதம் மேனன், பிரேம், சரவணன் அனைவருக்கும் நன்றி. புது இயக்குனர்கள் நல்லா கதை பண்றாங்க. அவர்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். படம் முழுக்க ரஜினியுடன் நடிப்பது என் ஆசை.
எங்க சென்றாலும் 'குந்தவை'யாக பார்ப்பது
இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி... கல்கி நாவல் படித்தவர்களுக்கு குந்தவை மீது பெரிய இமேஜ் இருக்கு. அதில் நான் சரியாக இருப்பேனா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால் இன்று குந்தவை என்றால் நான் தான் என மக்கள் கூறுவதில் மகிழ்ச்சி.
திரிஷாவுக்கு 2022 எப்படி இருந்தது
ரொம்ப நல்லா இருந்தது... பான் இந்தியா படமாக 'பொன்னியின் செல்வன்' வெளியானது பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. 'ராங்கி'லயும் என் நடிப்பு மக்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.