நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் படம் விடுதலை. இதனை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிக்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
விஜய்சேதுபதி, சூரி தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், நடிக்கிறார்கள்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.