மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் வங்கி கடனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். முன்பு நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட சிவாஜி தலைவராக இருந்தபோது வங்கியில் கடன் பெறப்பட்டது. இந்த கடனை நீண்ட காலம் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் விஜயகாந்த் தலைவரான பிறகு கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார்.
நாசர் தலைவரான பிறகு வங்கி கடன் பெறாமலேயே நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அது சிறப்பான தொடக்கமாகவும் அமைந்தது. அதன்பிறகு நடந்த நிர்வாக மாற்றம், ஆட்சி மாற்றம், வழக்குகள், உள் குழப்பங்களால் 70 சதவிகித பணிகளோடு கட்டிடம் நின்று போனது.
தற்போது நாசர் மீண்டும் தலைவராகி இருக்கும் நிலையில் கட்டிட பணிகளை தொடங்க நிதி வசதி இல்லை. இதனால் சங்கத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 30 கோடி கடன்பெற தலைவர் நாசரும், துணை தலைவர் பூச்சி முருகனும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கடன் கிடைத்ததும் 6 மாதத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.