ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாலிவுட் நடிகை சன்னி லியோன் இதற்கு முன்பு வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்துள்ள முதல் படம் 'ஓ மை கோஸ்ட்'. இந்த படத்தில் அவருடன் தர்ஷா குப்தா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இயக்கி உள்ளார். படம் நாளை வெளிவருகிறது.
படத்தின் புரமோசன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள சன்னி லியோன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: இந்த ஆண்டு நான் தென்னிந்திய மொழி படங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறேன். கொரோனா காலத்திற்கு பிறகு சினிமா கண்டென்டுகளை நோக்கி செல்கிறது. அதனால் நடிகர்களுக்கு விதவிதமான கேரக்டர்கள் கிடைக்கிறது. நான் இந்த படத்தில் இளவரசியாகவும், பேயாகவும் நடித்திருக்கிறேன். வெயிட்டான வாளை கையில் தூக்கி கொண்டும் பல கிலோ எடையுள்ள உடைகளை அணிந்து கொண்டும் நடிக்க சிரமமாக இருந்தது.
பேயாக நடிப்பதில் சிரமம் இல்லை. மேக் அப் மேனுக்குத்தான் சிரமம் இருந்திருக்கும். பேய் இருக்கா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு பேய் பயம் இல்லை. பேய் ஏன் மனிதனுக்கு தீமை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எனக்குள் உண்டு. ஐ லவ் கோஸ்ட்.
நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவற்றை நான் எடுத்துக் கொள்வதே இல்லை. புறம் தள்ளி விடுகிறேன். பாசிட்டவான விஷயங்கள் நிறைய இருக்கும்போது எதற்கு நெகட்டிவ் கமெண்டுகளில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நான் படிப்பதில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் பாசிட்டிவ்களை மட்டுமே என் கவனத்திற்கு கொண்டு வருவார்கள்.
என்னை பற்றி அறியாதவர்கள், எனது அன்றாட பணி பற்றி தெரியாதவர்கள் என்னை பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைக்கும்போது அவற்றை நான் ஏன் கவனிக்க வேண்டும். முகம் தெரியாத அந்த நபர்களின் கமெண்டுகள் பற்றி எனக்கு கவலை இல்லை.
இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.