நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நோக்கி நெருங்கி வருகிறது. டல் அடிக்கும் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்புகூட்ட தயாரிப்பு தரப்பு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 12 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டவும் செண்டிமெண்டை தூக்கலாக தரவும் பங்கேற்பாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வரழைக்கப்படுகிறார்கள்.
இதுவரை ஷிவின், மைனா, ரக்ஷிதா, உறவினர்கள் வருகை தந்த நிலையில் மணிகண்டனின் அம்மா, மனைவி, மகன் ஆகியோர் வந்தார்கள். இதில் அடுத்து ஹைலைட்டாக மணிகண்டனின் சகோதரி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார்.