'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா | ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி | பிளாஷ்பேக் : கங்கை அமரன் இசை சாம்ராஜ்யம் நடத்திய 'வாழ்வே மாயம்' | கும்பமேளாவில் புனித நீராடிய சம்யுக்தா, ஸ்ரீநிதி ஷெட்டி | பிளாஷ்பேக் : புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் கிறிஸ்தவ போதகர்கள் ஆனது எப்படி? | பிளாஷ்பேக்: மேடை நாடகத்தில் வெற்றி பெற்று வெள்ளித்திரையில் தோற்றுப் போன “டம்பாச்சாரி” | 'விடாமுயற்சி' பட்ஜெட் எவ்வளவு ? | நீக் படத்திலிருந்து ‛புள்ள' பாடல் வெளியானது | மஞ்சள் தாலியை மாற்றிய கீர்த்தி சுரேஷ் | மூன்றாவது மகன் பவனுக்கு காது குத்து விழா நடத்திய சிவகார்த்திகேயன் |
விஷால், சுனைனா நடித்துள்ள லத்தி படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பி.என்.சன்னி. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் புதிய வில்லன். கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த சன்னி, மோகன்லால் நடித்த ஸ்படிகம் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன்பிறகு ஜோஜி படத்தில் பஹத் பாசிலின் தந்தையாக நடித்தார். தற்போது மேலும் சில மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் லத்தி படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.