மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சென்னை : சாமானியனும் சாதிக்க இயலும் என்பதை நிரூபித்தவர் கலையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி. இன்று(டிச.,12) தனது 73வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரை காண அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடுவர். இந்த பிறந்தநாளுக்கும் ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டின் முன் அவரை சந்தித்து வாழ்த்து கூற ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் அவர் ஊரில் இல்லை.
ரஜினி மனைவி லதா வீட்டிற்கு வெளியே வந்து கூறுகையில், ‛‛‛சார் ஊர்ல இல்ல... பட பிடிப்பிற்காக ஐதராபாத் சென்று விட்டார். ரசிகர்கள் யாரும் குவிய வேண்டாம்'' என்றார். ரஜினியை பார்க்கலாம் என்று வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிலர் அவரை காண முடியவில்லையே என கண்ணீர் விட்டனர்.
தலைவர்கள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள், திரைக்கலைஞர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி : ‛‛என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்'' என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ‛‛இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கிறேன்'' என அண்ணாமலை கூறியுள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தி : ‛‛அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினி
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‛பாபா' படம் 20 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டல் தரத்தில் மெருகேற்றப்பட்டு டிச., 10 அன்று மறு வெளியீடு செய்யப்பட்டது. அன்றே ரசிகர்களுடன் படம் பார்த்த லதா ரஜினி கேக் வெட்டி கொண்டாடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நேற்று இரவு குரோம்பேட்டை வெற்றி தியேட்டரிலும் ரசிகர்களுடன் பாபா படம் பார்த்தார் லதா ரஜினி. அங்கு இரவு 12 மணியளவில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய கேக்கை வெட்டி ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஹேப்பி பர்த்டே தலைவா - தனுஷ்
நடிகரும், ரஜினியின் முன்னாள் மருமகனான தனுஷ், ‛‛ஹேப்பி பர்த்டே தலைவா'' என்று பதிவிட்டுள்ளார்.