நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆந்திர மாநில முதல்வர்களாக இருந்த என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கை சினிமா ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் காமராஜர், ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தாராமையாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"என்னுடைய வாழ்க்கையை சினிமாவாக நடிக்க சிலர் முன்வந்தார்கள். நான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். அப்படியே எடுத்தாலும் அதில் நான் நடிக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார் சித்தாராமய்யா.
ஆனாலும் சித்தாராமய்யாவின் நண்பரும், தயாரிப்பாளருமான சிவராஜ் தங்கடகி முழுமூச்சாக இந்த முயற்சியில் இறங்கி உள்ளார். அதோடு சித்தாராமையாவாக நடிக்க அவரைப்போன்ற சாயலும் உடல் அமைப்பும் கொண்ட விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவராஜ் கூறியிருப்பதாவது: 'தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதுகுறித்து அவர் பேசுவதைத் தள்ளி வைத்திருக்கிறோம். ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் நாங்கள் மீண்டும் இது குறித்து பேசவுள்ளோம்” என்றார்.
ஜெயலலிதாவாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கங்கனா நடித்ததும், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக கேரளாவை சேர்ந்த மம்முட்டி நடித்ததும் குறிப்பிடத்தக்கது.