மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா |
இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ராம் பொத்தனேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட கழகத்திற்கு 2 படங்களை தயாரித்து கொடுக்கிறார்.
இதில் ஒரு படத்தை ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வமும், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்கள்.
"என்.எப்.டி.சிக்கு 2 படங்களை இயக்குகிறோம். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது” என்கிறார் லிங்குசாமி.
ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் 5 படங்களைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனங்களுடன் இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி என்ற அமைப்பும் இணைந்துள்ளது.