23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாளத்தில் பிரேமம் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த பின்னர், கிட்டத்தட்ட 7 வருடங்களாக தனது அடுத்த படத்தை இயக்காமல் அமைதி காத்து வந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். காமெடி ஆக்ஷன் கலந்து இந்த படம் உருவாகியுள்ளது. பிரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அல்போன்ஸ் புத்ரனே கவனித்துள்ளார்.
கடந்த ஓணம் பண்டிகை சமயத்திலேயே இந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதேசமயம் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தாமதம் ஆகிறது என்றும், ரசிகர்களுக்கு நல்ல படைப்பாக பரிமாற வேண்டும் என்பதால் இந்த தாமதத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அல்போன்ஸ் புத்ரன் கூறியிருந்தார். ஆனால் படமாக்கப்பட்ட சில காட்சிகள் அல்போன்ஸ் புத்ரனுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் ரீ-ஷூட் செய்ததால் தான் இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக இந்தப்படம் வெளியாகலாம் என யூகமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு முன்கூட்டியே டிசம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிஸ்டின் ஸ்டீபன் இதுபற்றி கூறும்போது, “திரைப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கலாம்.. கடவுளே தயவுசெய்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் இனி எந்த திருப்பங்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவும்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.